தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை குஷ்பு. நாட்கள் செல்ல செல்ல, திரை பயணத்தில் இருந்து அரசியல் களத்தில் இறங்கினார். அதனை தொடர்ந்து திமுகவில் சேர்ந்த குஷ்பு, பிரசாரத்திற்கு அனுப்பப்பட்டார். திமுகவில் அவருக்கு முக்கிய பொறுப்புகள் குஷ்புக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்..

இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு குஷ்பு பாஜகவில் இணைந்தார்.. கடந்த 2021 தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, திமுக வேட்பாளர் எழிலனிடம் தோல்வி அடைந்தார்.. தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக குஷ்பு இருந்து வருகிறார்.. மேலும் பாஜக அரசு குறித்து எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு குஷ்பு பதிலடி கொடுத்து வருகிறார்.. அதுமட்டுமின்றி விலைவாசி உயர்வு போன்ற விஷங்களை கண்டித்து மாநில அரசை விமர்சித்தும் வருகிறார்.. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்..
பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் தனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தன்னால் முடிந்ததை செய்வேன் என்றும், பெண்களுக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.. இதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், தேசிய மகளிர் ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதே போல் பல்வேறு தரப்பினரும் குஷ்புவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..