fbpx

மீனா காதலித்து கழட்டி விட்ட நடிகர் இவர் தான். இது தான் காரணமாம்…

தனது வசீகர முகத்தால், ரசிகர்கள் பட்டாளத்தையே தன் பக்கம் வைத்திருந்தவர் தான் நடிகை மீனா. தனது லட்சணமான முகத்திற்கு பேர் போன நடிகை மீனா, 1982 ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், நடிகர் ரஜினிகாந்தின் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர், நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாகும் அளவுக்கு அவர் சினிமாவில் வளர்ந்தார். இவரது வசீகர அழகில் மயங்கி, அவரை காதலித்த நடிகர்கள் அநேகர். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று, மீனாவின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்ற சிலரில் ஒருவர் தான் நடிகர் சரத்குமார்.

ஆனால், அவரது தாய், “என் மகள் இப்போது தான் சினிமாவில் வளர்ந்து வருகிறார். அதனால் அவளுக்கு இப்போது திருமணம் செய்யும் யோசனை எல்லாம் எங்களுக்கு இல்லை” என கூறி அவரை அனுப்பிவிட்டார்.. இப்படி மீனாவை பலர் காதலித்தாலும், மீனா ஒருவரை தான் காதலித்தார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை, பிரபு தேவா தான். ஆம், நடிகர் பிரபுதேவாவும் நடிகை மீனாவும் டபுள்ஸ் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். எந்த கதாநாயகனுடனும் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் பிரபுதேவாவுடன் மீனா படு ரொமான்டிக்கான காட்சிகளில் நடித்துள்ளார். அந்த நேரத்தில் நடனம் என்றாலே பிரபு தேவா தான் என்ற பெயரை பெற்று, அப்போது தான் அவர் தனக்கென்ற கால் தடத்தை தமிழ் சினிமாவில் பதித்தார்.

இந்த சுழலில், பிரபுதேவாவிடம் காதல் வயப்பட்டார் நடிகை மீனா. பிரபுதேவாவும் மீனாவை காதலித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் பிரபுதேவாவின் நடவடிக்கைகள் மீது நடிகை மீனாவுக்கு சில சந்தேகங்கள் வந்துள்ளது. அதே சமயம், மீனாவின் நெருக்கமான தோழிகள் சிலர், பிரபுதேவாவிற்கு அதுதான் வேலை. அவர் நிறைய நடிகைகளை காதலித்திருக்கிறார். அப்படிதான் அவருக்கு நீயும் என்று கூறி எச்சரித்திருக்கிறார்கள். இதுவும் பிரபுதேவாவின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றமும் நடிகை மீனாவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் குழம்பி போன மீனா, தேவையில்லாத வம்பு எதற்கு என்று நினைத்து பிரபு தேவாவை கழட்டி விட்டுவிட்டார்.

மேலும், அவரது தாயின் விருப்பத்தின் படியே, திரைத்துறைக்கு சமந்தமே இல்லாத வித்யாசாகர் என்ற ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற ஒரு குழந்தைக்கு உள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், நடிகை மீனாவின் தோழிகள் கூறியது போலவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்ற நிலையில் இருந்த நடிகர் பிரபுதேவா, நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதற்காக தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

Read more: Drugs | நடிகர், நடிகைகளுக்கு போதைப்பொருள் சப்ளை..!! ஆர்யா பட நடிகை அதிரடி கைது..!!

English Summary

actress-meena-fell-in-love-this-actor

Next Post

”2026இல் ஆட்சியமைப்பது இந்த கட்சிகள் தான்”..!! த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பரபரப்பு பேட்டி..!!

Sat Nov 9 , 2024
Tamil State Congress Party President GK Vasan has said that in 2026, like-minded parties will stand together and form the government.

You May Like