fbpx

கல்யாணத்திற்கு பிறகு வாழ்க்கையே மாறிடுச்சு.. அந்த டைம்ல விஜயகாந்த் சார் தான் ஹெல்ப் பண்ணாரு..!! – நடிகை சிவரஞ்சனி

நடிகை சிவரஞ்சனி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது தான் காதலித்து திருமணம் செய்த நடிகர் ஸ்ரீகாந்த் பற்றியும், தன்னுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் குறித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை சிவரஞ்சனி கன்னட படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்த போதிலும் இவருக்கு அதிகமான தமிழ் படங்கள் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. நடிகர் விஜயகாந்த், கார்த்திக், அரவிந்த்சாமி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழில் வெற்றி படங்களை கொடுத்துள்ளார் சிவரஞ்சனி.

நடிகர் ஸ்ரீகாந்த் உடனான திருமணம் குறித்து அவர் பேசுகையில், என் வாழ்க்கையில் நான் செய்த ஒரு நல்ல விஷயம் என்றால் அது என்னுடைய கணவரை திருமணம் செய்ததுதான். அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையின் மாறியது. நான் 21 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அந்த நேரத்தில் புகழில் உச்சத்தில் இருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நான் நடித்த பல படங்கள் கிட் அடித்தது. அதனால் ஏன் இப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என்று பலர் கேட்டார்கள்.

நான் இதுதான் எனக்கு சரியான நேரம் என்று சொன்னேன். இப்போ வரைக்கும் என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதுபோல சினிமாவில் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று சொன்னால் கேப்டன் விஜயகாந்த் சாருடன் நடித்தது தான்.

கொடைக்கானலில் நடிகர் கார்த்திக்குடன் ஒரு படத்திலும் சென்னையில் நடிகர் விஜயகாந்துடனன் ராஜதுரை படத்தில் தான் நடித்ததாகவும் அடுத்தடுத்து இரண்டு படங்களின் சூட்டிங் தொடர்ந்து நான்கு நாட்கள் பங்கேற்ற நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய பிரச்சனையை கேள்விப்பட்ட நடிகர் விஜயகாந்த் இயக்குனருடன் பேசி தனக்கு உதவியதாகவும் சிவரஞ்சனி கூறியுள்ளார்.

இயக்குநர் எஸ்ஏசியுடன் பேசி, தன்னுடைய டேட்ஸ்களை அட்ஜஸ்ட் செய்ததாகவும் சக நடிகர், நடிகைகளின் பிரச்சினைகளை மிகவும் சிறப்பாக விஜயகாந்த் கையாள்வார் என்றும் சிவரஞ்சனி பாராட்டு தெரிவித்துள்ளார். மறைவதற்கு சில மாதங்களுக்கு முன்புகூட தன்னுடைய கணவரிடம் நடிகர் விஜயகாந்த் தொலைபேசி மூலம் ஒரு விஷயமாக பேசியதாகவும் அப்போது தன்னையும் நலம் விசாரித்ததாகவும் தன்னுடைய மகிழ்ச்சியை சிவரஞ்சனி பகிர்ந்துள்ளார். தற்போதும் தன்னை ரசிகர்கள் நினைவில் வைத்துள்ளது குறித்தும் உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்.

Read more ; ஸ்ரீதேவி எப்பவுமே அதுல ரொம்ப கவனமா இருந்தாங்க.. இறப்புக்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த போனி கபூர்..

English Summary

Actress Sivaranjani shared her memories about actor Srikanth, whom she fell in love with and married, and many other actors who acted with her.

Next Post

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் வேலை..!! டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Fri Nov 22 , 2024
An employment notification has been issued to fill 760 vacant posts in the Tamil Nadu Government Public Works Department.

You May Like