பல வருடங்களாக சினிமாவில் இருந்து வரும் நடிகர் சரத்குமார், சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருந்து வருகிறார். இவர் என்னதான் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது உள்ள 2கே கிட்ஸ் மத்தியிலும் இவர் பிரபலமாகத்தான் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், இவர் பல திரைப்படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறார்.
மேலும், தற்போது ரேடான் ப்ரொடக்ஷன் நிறுவனத்தையும் கவனித்து வருகிறார். நடிகர் சரத்குமார், நடிகை சாயாவை முதலில் திருமணம் செய்தார். அவருக்கு வரலட்சுமி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இவர் சாயாவை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை ராதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது வரை ராதிகா மற்றும் சரத்குமார் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில், வரலட்சுமி ராதிகாவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அதற்குப் பிறகு இப்போது அவரை புரிந்துகொண்டு ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சரத்குமாரின் மகளான வரலட்சுமி, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆன வரலட்சுமி, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2வில் நடுவராக பங்கேற்று வருகிறார். அந்நிகழ்ச்சியில், 3 குழந்தைகளுக்கு அம்மாவான 25 வயது பெண் போட்டியாளர் ஒருவர், தனது வாழ்கையை குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறும் போது, “எனக்கு மியூசிக் கேட்டாலே டான்ஸ் தானாகவே வந்துவிடும். இதுவரை நான் ரோட்டில் தான் டான்ஸ் ஆடி இருக்கிறேன்” என்று உணர்ச்சிகரமாக பேசியுள்ளார். இதைக்கேட்ட வரலட்சுமி, ஒரு உண்மையை சொல்கிறேன், இதுவரைக்கும் யாரிடமும் இதை சொன்னது இல்லை. இது ரியாலிட்டி ஷோ என்பதை தாண்டி திறமையை காட்டக்கூடிய மேடை என்பதால் சொல்கிறேன்.
நான் சினிமாவிற்கு வருவதற்கு முன், ரூ. 2500க்காக முதன்முதலில் ஒரு ஷோவில் ரோட்டில் டான்ஸ் ஆடினேன். அதனால், இனி ரோட்டில் ஆடுகிறோம் என்று தப்பா நினைக்க வேண்டாம், நான் ஆரம்பித்தது ரோட்டில் தான். ஆகையால் நீங்களும் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு வருவீங்க” என்று அந்த பெண்ணிடம் அவர் கூறியுள்ளார்.
Read more: “உங்க அம்மாக்கு உடம்பு சரியில்லை” நம்பி சென்ற இளம்பென்னிற்கு நேர்ந்த கொடூரம்..