fbpx

தமிழகமே மகிழ்ச்சி..‌! சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் முன்பதிவு…! தமிழக அரசு அறிவிப்பு…!

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சுபமுகூர்த்ததினமான இன்று கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

வரவிருக்கும் ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை ஏற்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Woww...! தமிழக அரசு சார்பில் 20 கிலோ வரை அரசு மானியத்தில் பாரம்பரிய விதை நெல்...! விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு...!

Wed Oct 18 , 2023
பாரம்பரிய நெல் இரகங்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்காக, ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 20 கிலோ விதை நெல் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கிறது. இங்கு நெல் பிரதான சாகுபடி பயிராகும். குறிப்பாக CO 51, BPT 5204, NLR 34449, IWP உள்ளிட்ட சன்னரக நெல் ரகங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பரப்பில் […]

You May Like