டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் ஒரு பாட்டிலுக்கு 10-20 ரூபாய் கூடுதலாகவும், பீர் பானங்கள் 20-30 ரூபாய் வசூலிப்பதாக நுகர்வோர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் மதுபான விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடத்த சமிபத்தில் முடிவு செய்தது. பெரும்பாலான ஊழியர்கள் சிறிய அளவிலான தொகைகளை திரும்ப தருவதில்லை என்ற புகார்களும் உள்ளன. கூடுதல் கட்டணங்களை வசூல் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் டாஸ்மாக் உயர் நிர்வாக அதிகாரிகள் நடத்திய சோதனையில், சென்னையில் உள்ள அதன் கடைகளில் 5 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதில் விற்பனையாளர்கள் ஈடுபட்டதற்கான தெளிவான ஆதாரங்களைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் உள்ளடாஸ்மாக் கடைகளில் UPI கட்டண முறையை அறிமுகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. இந்த நடைமுறையை கொண்டு வந்தால் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக், கலால் துறை புள்ளிவிவரங்களின்படி, நிதியாண்டில் ஆண்டுக்கு 44,0986 கோடி ரூபாய் விற்பனையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.