fbpx

வரும் 10-ம் தேதி அன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…! தமிழக அரசு உத்தரவு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாசி மாதத்தின் முகூர்த்த தினமான வரும் 10ம் தேதி அன்று கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என பத்திரப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான 10.03.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதனை ஏற்று மாசி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 10.03.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Additional tokens in deed registration offices on the 10th…! Tamil Nadu government orders

Vignesh

Next Post

கடலில் மண் எடுத்துவேண்டினால் நினைத்து நடக்கும்.. அதிசய கோயில் எங்க இருக்கு தெரியுமா..?

Sun Mar 9 , 2025
If you pray to the sea with sand, the Uvari Swayam Lingam will fulfill your wish!

You May Like