பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பெண்கள் வெளியே சென்றால் பாதுகாப்பு இல்லை என்ற சூழல் மாறி, தற்போது பெண்கள் வீட்டில் இருந்தாலும் பிரச்சனை தான் என்று சொல்லும் அளவிற்கு, கொடூர சம்பவங்கள் நடந்து வருகிறது. அதிலும், பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பதவியில் இருப்பவர்களே இன்று பெண்களை சீரழித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர், அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து பேருந்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அந்த வகையில், சம்பவத்தன்று அவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை அம்பத்தூரில் இருந்து மாநகர பேருந்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது, அதே பேருந்தில், புழல், அந்தோணியார் கோயில் 3வது தெருவை சேர்ந்த வழக்கறிஞர் 58 வயதான குருமூர்த்தி என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது அவர், அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், பேருந்தில் வைத்தே குருமூர்த்தியிடம் தகராறு செய்துள்ளார். இது குறித்து அறிந்த பேருந்து ஓட்டுநர், புழல் காவல் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி, இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வழக்கறிஞர் குருமூர்த்தியை போலீசிடம் ஒப்படைத்தார். வழக்கறிஞரே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: ஒரே வீட்டில் தங்கிய காதலர்கள், மூன்றாவது மாடியில் செய்த காரியம்..