இந்தியாவின் பல பகுதிகளில், திருமண விழாக்கள் ஆடம்பரமாகவும், வேடிக்கையாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கும். கூடுதலாக, இந்திய திருமணங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று மணமகனும், மணமகளும் செய்யும் சடங்குகள் . சில சடங்குகள் திருமணத்திற்கு முன்பும், மற்றவை அதன் பின்னரும் நடைபெறும். அதில் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு மரபுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..
இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில், புதுமணப்பெண் திருமணத்திற்குப் பிறகு முதல் வாரத்தில் எந்த ஆடையும் அணிய முடியாது. இந்த நேரத்தில், கணவன் மற்றும் மனைவி ஒருவருக்கொருவர் பேச முடியாது, இமாச்சல பிரதேசத்தின் மணிகரன் பள்ளத்தாக்கில் உள்ள பினி கிராமத்தில் இந்த பாரம்பரியம் இன்றும் பின்பற்றப்படுகிறது. இதற்கான காரணமும் சொல்லப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் ஹிமாச்சலப்பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள பினி கிராமத்தில், பேய்கள் மற்றும் அரக்கர்கள் அலைந்து திரிந்ததாக சொல்லப்படுகிறது. அந்த பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தியிருக்கும் திருமணமான பெண்களை அழைத்து சென்று விடுமாம். இப்படி நடந்து கொண்டிருக்க இந்த கிராமத்து பெண்களை லாஹு கோண்ட் என்ற தெய்வம் காப்பாற்றியுள்ளது.
லாஹு கோண்ட் தெய்வம் பேய்களை அழித்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக சாவான் மாதத்தில் 5 நாட்கள் இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகள் அணிவதில்லை. இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விதியை மீறி ஆடை அணியும் பெண்கள் சிறிது நாட்களிலேயே துர்சம்பவங்களை சந்திப்பதால் யாரும் இந்த பாரம்பரியத்தை மீர முயல்வதில்லை. இன்றைய காலத்தில் கிராமத்தில் உள்ள பெண்கள் நிர்வாணமாக வெளியே வருவதற்கு பதிலாக வீட்டிற்குள்ளேயே பூட்டி இருக்கிறார்கள்.
அதே போல இந்த 5 நாட்களும் கணவன் மனைவி தள்ளி இருக்க வேண்டும் என்றும் சிரித்து பேசக்கூடாது என்றும் கூறுகின்றனர். சிரித்து, மகிழ்ந்து இருப்பதைப் பார்த்தால் மீண்டும் பேய் வந்து பெண்ணை தூக்கிசென்றுவிடும் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை. மேலும், வெளியாட்கள் யாரையும் கிராமத்திற்குள் நுழைய அந்த மக்கள் அனுமதிப்பதில்லை.