fbpx

PM MODI| “எம்ஜிஆருக்கு பிறகு சிறந்த ஆட்சியை வழங்கியவர் ஜெயலலிதா” பிரதமர் மோடி புகழாரம்.!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் போது பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினார் . கடந்த வருடம் ஜூலை மாதம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய அவரது யாத்திரை திருப்பூரில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து என் முன் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மாதப்பூரில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சிறப்புரையாற்ற பாரதப் பிரதமர் மோடி வருகை புரிந்தார். சூலூர் விமானப்படை தளத்திற்கு தனி விமான மூலம் வந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்றார்.

இந்நிலையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரை நினைத்து பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார். எம்ஜிஆர் ஏழை மக்களுக்கு செய்த மருத்துவ உதவிகளால் என்றும் மக்கள் மனதில் வாழ்வதாக பாராட்டினார். மேலும் எம்ஜிஆர் குடும்ப ஆட்சி செய்யவில்லை எனவும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் என பாராட்டு தெரிவித்தார்

மேலும் எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியை கொடுத்தவர் ஜெயலலிதா தான் என தெரிவித்த பிரதமர் மோடி அவருடன் சில காலம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது சிறப்பான ஒன்று என தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் தனி விமானம் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

English Summary: After MGR Jayalalitha gave best rule in Tamilnadu. PM Modi praise for Former CM at Palladam meeting.

Read More: PM Modi | ’என் மண் என் மக்கள்’ யாத்திரை..!! தமிழ்நாடு வந்தடைந்தார் பிரதமர் மோடி..!!

Next Post

PM Modi | ’திமுகவால் அரசியலுக்கு இழுக்கு’..!! ’தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை'..!!

Tue Feb 27 , 2024
PM Modi | இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம் பல்லட்டம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, தமிழ்நாடு தேசியத்தின் பக்கம் நிற்கிறது. தொழில் துறையில் கொங்கு மண் முக்கிய பங்காற்றி வருகிறது. என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். எம்.ஜி.ஆரை அவமதிக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தனர். காங்கிரஸ் – திமுக கூட்டணி […]

You May Like