fbpx

கேப்டன் விஜயகாந்த் மரணம்.! முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவால் நெகிழ்ந்த பொதுமக்கள்.! அரசியல் பண்பாளர் என பாராட்டு.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவாள் என்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் என பல லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ஒரு முடிவு மக்களை நெகிழச் செய்திருக்கிறது. விஜயகாந்தின் இறப்பை முன்னிட்டு இரங்கல் செய்தி தெரிவித்திருந்த அவர் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலை பார்ப்பதற்கு பல லட்சக்கணக்கான மக்கள் வருவதால் அவரது உடலை ராஜாஜி அரங்கத்தில் வைப்பதற்கு அனுமதி அளித்தார்.

எனினும் விஜயகாந்தின் உறவினர்கள் அவரது உடலை மக்கள் பார்வைக்காக தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்துள்ளனர். மேலும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அவரது இந்தப் பண்பும் அரசியல் நாகரீகமும் அனைவரது மனங்களை வென்றிருப்பதோடு பலராலும் போராட்டப் பட்டு இருக்கிறது.

மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து இரங்கல் செய்தி தெரிவித்திருக்கும் ஸ்டாலின் “அன்பிற்கினிய நண்பர் விஜயகாந்தின் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திரைத்துறை முதல் அரசியல் வரை அனைத்து தலங்களிலும் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறியவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். நல்ல மனிதராகவும் பிறருக்கு உதவி செய்பவராகவும் விளங்கியவர் அவர். மேலும் சினிமா நடிகராகவும் அரசியல் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை திறம்பட நிர்வாகித்தவர்” என்றும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

Next Post

பிரியாணி கடை வட மாநில இளைஞர்.! காலையில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்.! நடந்தது என்ன.?

Thu Dec 28 , 2023
பிரியாணி கடையில் வேலை பார்த்த வட மாநில இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் அஜீஸ் அகமது என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேபாளத்தைச் சார்ந்த ரோகித் சர்மா என்பவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா என்பவரும் பணியாற்றி வந்தனர். நேற்று […]

You May Like