fbpx

பகீர் சம்பவம்.! 4 வயது மகனை கொடூரமாக கொலை செய்த தாய்.! பையில் எடுத்துச் சென்ற கொடூரம்.!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன அதிபர் கோவாவில் தனது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 39 வயது சுச்சானா சேத் அய்மங்களா காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கி வரும் மைண்ட் ஃபுல் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருப்பவர் சுச்சானா சேத். இவர் தனது 4 வயது மகனுடன் கடந்த சனிக்கிழமை கோவா நகருக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். இந்நிலையில் திடீரென தனது அறையை காலி செய்த இவர் உடனடியாக பெங்களூர் திரும்புவதற்கு வாகனம் ஏற்பாடு செய்து தருமாறு ஹோட்டல் நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார்.

அவர்கள் விமானத்தில் செல்லலாமே என பரிந்துரைத்த போதும் அதனை மறுத்த சேத் தனக்கு டாக்ஸி ஏற்பாடு செய்து தருமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகிகள் அவருக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அவர் ஹோட்டலை காலி செய்த பிறகு அறையை சுத்தம் செய்யும்போது இரத்தக் கறைகள் இருப்பதை கண்ட ஹோட்டல் பணியாளர்கள் இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் டாக்ஸி டிரைவரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து யாருக்கும் சந்தேகம் வராத வகையில் டாக்ஸி ஓட்டுனர் வாகனத்தை அய்மங்களா காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அரிமங்கலம் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் உடைமைகளை சோதித்த போது 4 வயது மகனை கொலை செய்து பையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

’ஸ்டிரைக் பிரச்சனைக்கு என்கிட்ட ஒரு தீர்வு இருக்கு’..!! புது யோசனை சொன்ன ஹெச்.ராஜா..!!

Tue Jan 9 , 2024
ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ’’போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு போராட்டம் மேலும் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில், […]

You May Like