fbpx

Elon Musk | மனித குலம் முடிவுக்கு வரும் அபாயம்.!! டெஸ்லா நிறுவனர் பகிர்ந்து அதிர்ச்சி தகவல்.!!

Elon Musk: ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியால் பல்வேறு நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்லாது பிற துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்ன புரட்சிகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பல்வேறு விதமான வளர்ச்சிகள் இருந்தாலும் அவற்றின் எதிர்மறையான விளைவுகளும் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்கால தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறைகளில் AI தொழில்நுட்பம் செயல்படுத்த பட இருக்கும் இந்த சூழலில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தின் சாதகங்கள் மற்றும் பாதகங்களை பற்றிய விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தொழில் முனைவோர்களும் பணக்காரர்களும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தில் பங்கேற்ற டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்(Elon Musk )செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் என தெரிவித்திருக்கிறார்.

GREAT AI DEBATE நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்துக்களை பதிவு செய்த அவர் 2030க்குள் இயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். அவை மனிதர்களை விட பல மடங்கு ஆற்றல் மிக்கவையாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும். எனவே இவற்றை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனித குலத்தை முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனினும் எதிர்மறையானவற்றை விட நேர்மறையானவை அதிகமாக இருக்கும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Read More: Gyanvapi Masjid | இந்துக்களின் பூஜைக்கு தடை விதிக்க முடியாது.!! ஞானவாபி மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி.!!

Next Post

உலகளாவிய ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 15% - பிரதமர் மோடி பெருமிதம்

Mon Apr 1 , 2024
 உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்குடன் இந்தியா இன்று சர்வதேச வளர்ச்சியின் இயந்திரமாக மாறி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார் இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு தொடக்க விழா மும்பையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் மோடி ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “இன்று உலகிலேயே […]

You May Like