fbpx

நீட் தேவையில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்……! எடப்பாடி பழனிச்சாமி…..!

நீட் எனப்படும் மருத்துவர் நுழைவு தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் ஆத்தூரில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு எதிர்ப்பில் அதிமுக தான் முதன்மையான கட்சியாக இருக்கிறது. நீட் தேர்வில் இருந்து விளக்கு பெற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாகவும் இருக்கிறது நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் வரையில் சென்று போராடியது அதிமுக தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள் அரசு பள்ளியில் அதிகமாக படிப்பு வருகிறார்கள் சற்றேற குறைய 41% பேர் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி 7.5% உள் ஒதுக்கீடு பெற்றதன் மூலமாக ஏழை மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை செய்தது அதிமுக தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சி தான் நீட் தேர்வு வர முக்கிய காரணமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. கொள்கையின் அடிப்படையில் மட்டுமே கூட்டணி வைத்திருக்கிறோமே தவிர அடிமை என்று சொல்வது அப்பட்டமான பொய். திமுக தான் தற்போது அடிமை கட்சியாக செயல்படுகிறது என்று விமர்சனம் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி.

Next Post

புதுச்சேரி காரைக்காலில் பரவலாக மழை…..! மகிழ்ச்சியில் மக்கள்….!

Sun Jun 18 , 2023
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். வெயிலின் தாக்கம் குறையவில்லை. குளிர் காற்றுக்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் காரைக்கால் கடற்கரைக்கு நாள்தோறும் மாலை வேளையில் சென்று இரவு நீண்ட நேரத்திற்கு பின்னர் வீடு திரும்புகின்றனர். இத்தகைய நிலையில்தான் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலெடுத்து சுழற்சியின் காரணமாக, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் […]

You May Like