சென்னையில் வரும் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் “ சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில், கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்..” என்று குறிப்பிட்டிருந்தார்..
இந்நிலையில் சென்னையில் வரும் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. ஒரு சில காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஒரு சில வாரங்களில் இந்த செயற்குழு கூட்டம் மீண்டும் நடைபெறூம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..