fbpx

விடக்கூடாது…! தேர்தல் ஆணையம் மூலம் எடப்பாடிக்கு அடுத்த செக் வைக்கும் ஓ.பி.எஸ்…!

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்ப இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பிஎஸ் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை சட்டவிரோதமாக அறிவித்துள்ளனர். கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதையும் மீறி தேர்தல் ஆணையாளர்களாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் இருக்கிறது என்பதை சுட்டிகாட்டுகிறேன்.

’யாரை கேட்டு இப்படி பண்ணீங்க’..!! ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்பிய எடப்பாடி..!! பரபரக்கும் அதிமுக..!!

தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் முழு நிர்வாகத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். இந்த நிலையில், ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்புதல் பெறாமல் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் பொதுச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் சட்டவிரோதமானது, தவறானது மற்றும் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. பொதுக்குழு செல்லும் என்று மட்டுமே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உரிமையியல் வழக்கு தொடரலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குகளில் வாதங்கள் நடந்து வருகின்றன. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடருவதால் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அட்டவணையை அறிவித்து வெளியிடப்பட்ட செய்தி தவறானது. உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் தீர்ப்பு வராமல் அதிமுகவின் பதவிகள் மாற்றம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உலகின் மிக நீளமான நாக்கை கொண்ட அமெரிக்கர்!... ஜெங்கா விளையாடி கின்னஸ் சாதனை படைத்து அசத்தல்!...

Sun Mar 19 , 2023
உலகின் மிக நீளமான நாக்கை கொண்ட அமெரிக்காவை சேர்ந்த நபர், ஜெங்கா பிளாக் விளையாடி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். பொதுவாக ஆண் ஒருவரது நாக்கின் நீளம் சராசரியாக 7.9 செ.மீ. தான் இருக்கும். பெண்களுக்கு சராசரியாக 8.5 செ.மீ. அளவில்தான் நாக்கு இருக்கும். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சராசரி அளவைவிட 2 செ.மீ. நீளமாக உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாலினாஸ் நகரைச் சேர்ந்தவர் நிக் […]

You May Like