fbpx

BREAKING NEWS: “விபத்தில் சிக்கிய மாஸ்கோ சென்ற இந்திய விமானம்..” பயணிகளின் நிலை என்ன.? பதற்றத்தில் மக்கள்.!

இந்தியாவிலிருந்து மாஸ்கோ சென்ற விமானம் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் மோதி விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான செய்தி ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.

இந்தியாவிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம் ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான படக்ஷான் பகுதியில் அமைந்துள்ள குரான்-வா-முன்ஜான் மாவட்டத்தின் டோப்கானா மலைப்பகுதிகளில் மோதி விபத்துக்குள்ளானதாக தாலிபான் அரசின் கலாச்சார மற்றும் செய்திகள் பிரிவு தகவல் வெளியிட்டு இருக்கிறது.

விபத்திற்கான காரணம், விமானத்தில் பயணம் செய்தவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அவர்களின் நிலை என்ன.? என்பது போன்ற தகவல்கள் எதுவும் தெரியவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு மீட்பு குழுவை அனுப்பியிருப்பதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்திருக்கிறது. இந்த விபத்து குறித்து இந்திய அரசின் தகவல்களில் எதுவும் பதிவாகவில்லை.

மேலும் இந்தியாவில் இருந்து புறப்பட்ட அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக இருப்பதாக விமானத்துறை தெரிவித்திருக்கிறது. விபத்திற்குள்ளான இந்திய விமானம் சார்ட்டட் ஃபிளைட்டாக இருக்கலாம் எனவும் அரசு தரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Post

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல முடியவில்லையா..? வீட்டிலேயே இப்படி பூஜை செய்யுங்கள்..!!

Sun Jan 21 , 2024
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டிலேயே எப்படி ராமருக்கு பூஜை செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். ராமர் சிலை பிரதிஷ்தா விழா நாளை மதியம் 12:20 மணி முதல் 12:45 மணி வரை நடைபெறும் நிலையில், அப்போது ஓம் ராம் ராமாய நம என்ற வாசகத்தை நீங்கள் வீட்டில் எழுதி வைக்க வேண்டும். ஓம் ராம் ராமாய நம என்று நீங்கள் வீட்டில் ஓத வேண்டும். ராமர் […]

You May Like