fbpx

Airtel | 99 ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா..!! வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல் நிறுவனம்..!!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் (Airtel), தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, புதிய ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை அதிக வேலிடிட்டி, டேட்டா நன்மைகள், அன்லிமிடெட் அழைப்புகளுடன் ஏர்டெல் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை எடுப்பவர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அன்லிமிடெட் ப்ரீபெய்ட் பேக்கில் அதிகபட்ச டேட்டா வரம்பு 30 ஜிபி ஆகும். பயனர் அந்த 30 ஜிபி டேட்டாவையும் பயன்படுத்திவிட்டால், 64 கேபிஎஸ் வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்தலாம். ஆனால், இந்த ரூ. 99 டேட்டா பேக் பயனர்கள் ஏர்டெல் செயலியில் அடிப்படைத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஏர்டெல் 5ஜி பிளஸ் கிடைக்கும் பகுதிகளில் பயனர்கள் 5ஜி இணையத்தைப் பயன்படுத்தலாம்.

5ஜி வசதி இல்லாத பகுதிகளில் உள்ள பயனர்கள் ரூ. 99 டேட்டா பேக்கைப் பயன்படுத்தலாம். மறுபுறம், வோடபோன் ஐடியாவும் தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, ப்ரீபெய்டு பயனர்கள் ரூ. 199 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்கள் 50ஜிபி வரை டேட்டாவை பயனர்களுக்கு வழங்குகின்றன. ஏர்டெல்லின் இந்த ரூ.99 அன்லிமிடெட் டேட்டா திட்டத்தின் வேலிடிட்டி ஒரு நாள் மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்.

Chella

Next Post

World Cup Trophy | இன்னும் 50 நாட்கள்..!! தாஜ்மஹாலில் உலகக்கோப்பை டிராஃபி..!! வைரலாகும் புகைப்படம்..!!

Wed Aug 16 , 2023
இந்தாண்டுக்கான (2023) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் எதிர்கொள்கின்றன. 2023 ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், உலகக் கோப்பையின் 13-வது எடிஷன் ஆகும். இது ஐசிசியால் ஏற்பாடு செய்யப்படும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியாகும். […]

You May Like