fbpx

“நடிகர் அஜித்துக்கு ஆண்மை இருக்கானு சந்தேகமா இருக்கு”; தன்னை அசிங்கப்படுத்திய பத்திரிகையாளருக்கு அஜித் செய்த காரியம்..

நல்ல ஹீரோவாக மட்டும் இல்லாமல் நல்ல மனிதனாகவும் இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். 1990 ஆம் ஆண்டு, ‘என் வீடு என் கணவர்’ என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஜித், 1993 ஆம் ஆண்டு ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில், இவர் தொடர்ந்து நடித்த பவித்ரா, ராஜாவின் பார்வையில், போன்ற படங்கள் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் மனம் உடைந்த அஜித், தன்னால் யாருக்கும் நஷ்டம் ஏற்பட கூடாது என்ற எண்ணத்தில், திரை உலகை விட்டு விலக தீர்மானித்தார். அப்போது தான், இயக்குனர் வசந்த் இயக்கத்தில் மணிரத்தினம் தயாரித்த ‘ஆசை’ படத்தில் நடிக்கும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வெற்றி அஜித்தின் முடிவையே மாற்றியது. ஆசை படத்திற்கு பின் அஜித்தை ரசிகர்கள் பலர் கொண்டாடியுள்ளனர்.

தொடர்ந்து காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த அஜித்துக்கு, ‘காதல் கோட்டை’ பிளாக் பாஸ்டர் வெற்றியை கொடுத்தது. இந்த படம், சுமார் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது மட்டும் இல்லாமல், சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் இந்த படத்திற்காக அஜித் பெற்றார். இதற்க்கு பின், ஆக்ஷன் கதைக்களத்தில் அஜித் ஆர்வம் காட்ட துவங்கினார். இந்நிலையில், தன்னால் முடிந்தவரை, பலருக்கு உதவி செய்து வரும் இவர், தான் செய்த உதவிகளை குறித்து இவர் ஒருபோதும் வெளியே சொன்னது இல்லை. ஆனால் அவர் உதவி செய்ததது பற்றி அறிந்த பல பிரபலங்கள் தான் பேட்டிகளில் இந்த தகவல்களை கூறுவது உண்டு. அந்த வகையில், அஜித் ஒருவருக்கு செய்த உதவியை குறித்து பத்திரிகையாளர் பாண்டியன் தற்போது கூறியுள்ளார்.

அதாவது அஜித்துக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகியும், குழந்தை பிறக்காத நிலையில், திரைச்சுவை என்கிற பத்திரிக்கை, காதலித்து திருமணம் பண்ண அஜித்துக்கு இரண்டு மூன்று வருடமாக குழந்தையை இல்ல? அவருக்கு ஆண்மை இருக்கானு சந்தேகமா இருக்குது என்று எழுதி, அசிங்கப்படுத்தினார். ஒரு சில வருடங்களுக்கு பிறகு, இந்த செய்தியை எழுதிய பத்திரிக்கையாளர், விஜயா மருத்துவமனையில் ஹார்ட் அட்டாக் காரணமாக அட்மிட் ஆகியுள்ளார். ஆனால், அவரால் 2.5 லட்சம் ரூபாய் ஆபரேஷனுக்கு கட்ட முடியவில்லை. இதுகுறித்து அறிந்த அஜித், உடனடியாக அங்கு விரைந்து வந்து, அந்த பணத்தை கட்டி உள்ளார். அப்போது இது குறித்து அவரிடம் PRO கேட்ட போது, ” இந்த நேரத்தில் நாம் அவரை பழிவாங்க கூடாது. வலுவாக இருக்கும்போது நாம் சண்டை பிடிக்கலாம்” என்று கூறியுள்ளார். இந்த தகவலை தான் தற்போது பத்திரிக்கையாளர் பாண்டியன் கூறியுள்ள்ளார்.

Read more: இதுதான் திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனா? மருத்துவரை தாக்கிய விவகாரம்.. பொங்கி எழுந்த எல் முருகன்

English Summary

ajith-kumar-helped-the-reporter-who-mocked-him

Next Post

“நெப்போலியன் மகனிற்கு மீண்டும் திருமணமா?”; நெப்போலியன் அளித்த பரபரப்பு பேட்டி..

Wed Nov 13 , 2024
nepolian opens up about his son

You May Like