நடிகர் அஜித் தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இவர் படங்களில் நடிப்பதுடன் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் சுற்றி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பு முடிந்த பின்னர் தனது பைக்கில் இமயமலை வரை சென்று கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.
அதன் பின் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையெல்லாம், அடிக்கடி புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வெளியிட்டு வருவார்கள். அடுத்ததாக நடிகர் அஜித், விக்னேஷ் சிவனின் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார்.
அதற்கு முன் 18 மாதங்கள் 62 நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த பயணத்தை மேற்கொண்டு முடித்த பின்னர்தான் அஜித் அடுத்த படத்தில் நடிப்பார் என்றும், துணிவுக்கும் விக்னேஷ் சிவன் படத்திற்கும் இடையில் 18 மாதங்கள் இடைவெளி இருக்கும் என்று கூறப்படுகிறது. துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.