fbpx

ஸ்பெயின் கார் ரேஸ்.. இரண்டாவது முறையாக விபத்தில் சிக்கிய அஜித்.. உயிர் தப்பியது எப்படி..? – வெளியான தகவல்கள்

ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரின் கார் திடீரென்று விபத்தில் சிக்கியது. 3 முறை பல்டியத்த காரில் இருந்த அஜித் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

துபாயில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றபோது, அஜித் குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. அப்போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், பிறகு போர்ச்சுகல் நாட்டில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றார். இந்நிலையில், நேற்றிரவு ஸ்பெயின் நாட்டில் வாலென்சியா நகரில் நடந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றார். அப்போது அவரது காரை முந்திச்செல்ல முயன்ற இன்னொரு கார் பலமாக மோதியது. இதில் அஜித் குமாரின் கார் 3 முறை பல்டியடித்தது. இதில் சிக்கிய அஜித் குமார், அதிர்ஷ்டவசமாக காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார்.

பல்டியடித்த காரில் இருந்து இறங்கிய அஜித் குமார், தனது கைவிரலை உயர்த்தி, ‘ஐ ஆம் ஓகே’ என்று சொன்னார். உடனே  சென்னையில் இருந்த தனது உதவியாளர்களிடம் செல்போனில் பேசிய அவர், ‘நான் நலமாக இருக்கிறேன். எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. யாரும் எனக்காக கவலைப்பட வேண்டாம்’ என்று சொன்னார்.

பந்தய கார் எவ்வளவு பெரிய விபத்தில் சிக்கினாலும், பெரும் சேதம் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கார் ஓட்டும் அஜித் குமார் அணிந்துள்ள ஆடையின் வடிவமைப்பு எந்த விபத்திலும் தீப்பிடிக்காத வகையிலும், உடல்ரீதியாக எந்த காயமும் ஏற்படாத வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அஜித் விபத்தில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களை பதற்றப்பட வைத்துள்ளது. அடுத்து அவர் வரும் மார்ச் 1ம் தேதி பார்சிலோனாவில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்கிறார்.

இந்த விபத்தில் அஜித்தின் மீது எந்த தவறும் இல்லை என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். ரேஸின் ஐந்தாவது சுற்று வரை எல்லாம் சரியாக தான் இருந்தது.  ஆறாவது சுற்றில் முன்னாள் சென்ற கார் விபத்து ஏற்பட்டதால் அஜித்தின் கார் அந்த காருடன் மோதியது. ஒருமுறை விபத்து ஏற்பட்டும் அஜித் மீண்டும் டிராக்கில் திரும்பி வந்தார் ஆனால் இரண்டாவது முறை மீண்டும் விபத்து ஏற்பட்டது.  இதில் அஜித்தின் தவறு ஏதும் இல்லை என தெரிவித்தார்.

Read more : உலகின் நம்பர் ஒன் பணக்கார நாடு இதுதான்.. வெளியான டேட்டா..! லிஸ்ட்ல இந்தியா எந்த இடம்?

English Summary

Ajith was involved in a car accident for the second time.. How did he survive?

Next Post

நீங்கள் எடுத்துக்கொள்ளும் டேப்லெட்களில் இது போன்ற ரகசிய குறியீடுகள் ஏதேனும் உள்ளதா..? கவனமா இருங்க..

Sun Feb 23 , 2025
Tablet coding: Are there any secret codes like these on the tablets you take?

You May Like