fbpx

“வடிவேலு கூட மட்டும் நடிக்க மாட்டேன்” நடிகர் அஜித்குமார் எடுத்த முடிவு.. காரணம் இது தான்..

காமெடி என்ற உடன் நமது நினைவிற்கு முதலில் வருவது வடிவேலு. அற்புதமான நடிப்பு கலைஞனான இவரை, காமெடி டாக்டர் என்று கூட சிலர் புகழ்வது உண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தியவர் தான் வடிவேலு. எனினும், 1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில்தான் வடிவேலு முறையாக நடிகனாக அறிமுகமானார்.

படம் வெற்றிபெறவே ராஜ்கிரணும் வடிவேலுவும் இணைந்து, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பொன்னு விளையுற பூமி’ என பல படங்களில் நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது நடிக்க தொடங்கியுள்ள நடிகர் வடிவேலு, மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், கடந்த 22 ஆண்டுகளாக நடிகர் வடிவேலு நடிகர் அஜீத்குமாருடன் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

ஏனெனில், நடிகர் அஜீத்குமார் வடிவேலு தன் படங்களில் நடிக்க கூடாது என்று கூறிவிட்டார். ஆம், பல முன்னணி நடிகர்களுடன் நடித்த வடிவேலுவுடன் நடிக்க 22 ஆண்டுகளாக அஜீத்குமார் புறக்கணிக்க முக்கிய காரணம் ஒன்று உள்ளது. ஆம், எழில் இயக்கத்தில் அஜீத்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் கடந்த 2002ம் ராஜா என்ற திரைப்படம் வெளியானது. அதில், அஜீத்குமாருக்கு வடிவேலு மாமாவாக நடித்திருந்தார்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பின் போது, வடிவேலு அஜீத்குமாரை வாடா போடா என மரியாதை இல்லாமல் பேசி உள்ளார். இது அஜீத்குமாருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை பலமுறை கண்டித்தும் வடிவேலு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இது குறித்து படத்தின் இயக்குனர் எழில் கூறியும் வடிவேலு கேட்கவில்லை. இதனால் கோவமடைந்த அஜித்குமார், இனி எந்த படத்திலும் வடிவேலு என்னுடன் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டார்.

Read more: முதலிரவில், மணமகள் கேட்ட காரியம்; அலறியடித்து ஓடி, விவாகரத்து கேட்ட மணமகன்..

English Summary

ajithkumar refused to act with vaadivelu

Next Post

ஸ்மார்ட்வாட்ச் பட்டைகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயணங்கள் கண்டுபிடிப்பு..!! - ஆய்வில் அதிர்ச்சி

Sat Dec 21 , 2024
Smartwatch bands may expose users to harmful forever chemicals

You May Like