ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால், அந்த கணக்குகளை நிர்வகிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் சரியான பரிவர்த்தனை இல்லாவிடில் அதிக நாட்கள் பரிவர்த்தனை செய்யாமல் இருந்தால் அந்த வங்கி நிர்வாகம் அந்த கணக்கை செயல் இழக்க செய்துவிடும்.
அத்துடன் அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது ஒருவரின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியத்தையும் பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. ஆகவே ஒருவர் எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும் அதனை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம்.
மேலும் இது போன்ற பல வங்கி கணக்குகள் வைத்திருந்தால் அதன் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெறலாம். ஆகவே பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நன்று.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு வங்கியில் மதிப்பிடப்பட்டிருக்கும் குறைந்தபட்ச இருப்பு இருப்புத் தொகையை நாம் வைத்திருப்பது அந்த வங்கியால் கட்டாயமாக்கப்பட்டால் அது நமக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஆகவே ஒருவரின் வருமானத்திற்கு ஏற்றவாறு வங்கி கணக்குகளை நிர்வகிப்பது மிகவும் நல்லது.
அத்துடன் ஒரு வங்கி மதிப்பிட்டிருக்கும் குறைந்தபட்ச இருப்பு தொகையை நாம் வைத்திருக்க தவறினால் அந்த வங்கி விதிக்கும் அபராத தொகையையும் நாம் சேர்த்து செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆகவே இதையெல்லாம் யோசித்து பல கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளை கவனமுடன் நிர்வாகிக்க வேண்டும்.