fbpx

Kids: எச்சரிக்கை!… குழந்தைகளை குறிவைத்த கஞ்சா சாக்லெட் கும்பல்!… மூட்டை மூட்டையாக பறிமுதல்!

Kids: ஐதராபாத்தில் குழந்தைகளை குறிவைத்து கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும், கடைகளில் விற்பனை செய்வதும் போலீசாருக்கு ரகசிய தகவல் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் இரண்டு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 21,000 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கஞ்சா சாக்லேட் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த சிபுகுமார், சீத்தாராம் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் 21 ஆயிரம் கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: வேட்பாளர்கள் கவனத்திற்கு..!! 5 பேருக்கு மட்டுமே அனுமதி..!! 2 வாகனங்கள் மட்டுமே செல்லலாம்..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

Kokila

Next Post

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது தேர்தல் விதிமீறல் புகார்..!! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

Wed Mar 20 , 2024
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்ததாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாரை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் வழங்கிய திமுக வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், ”கடந்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்று மதத்தின் […]

You May Like