fbpx

கனமழை எதிரொலி…! அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைப்பு…!

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் நல்ல மேகக்கூட்டங்கள் உருவாகியிருக்கிறது. கிழக்குப் பகுதியில் இருந்து மேகக்கூட்டங்களுக்கு காற்று சென்று கொண்டிருக்கிறது. இதனால், இது புயலாக உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் பகுதி இன்னும் கணிக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, அது கடலோரப் பகுதி கரைக்கு இணையாக, சுமார் 150-லிருந்து 200 கி.மீட்டர் தொலைவில் நிலை கொள்ளக்கூடும். இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.

கனமழை காரணமாக இன்று காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று (27.11.2024) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு.

English Summary

All Annamalai University exams postponed

Vignesh

Next Post

20 கோடியில் மகன் திருமணம்... நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை...!

Wed Nov 27 , 2024
Income Tax Department raids highway contractor's house.

You May Like