fbpx

தமிழ்நாட்டில் இனி அரசு பஸ் எல்லாம் கரெக்ட் டைம்க்கு வரும்..!

தமிழ்நாட்டில் அரசு பஸ்கள் எந்தெந்த பஸ் ஸ்டாண்டுக்கு எந்தெந்த நேரத்தில் வரும், எந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்களை செல்போனிலேயே அறிந்து கொள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவல் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இதை தமிழக அரசு செய்கிறது.

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் அரசு பஸ்களை இயக்கி வருகிறது. சிறு கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு டவுன் பஸ்களும், ஒரு நகரம் விட்டு மற்றொரு நகரம் செல்ல ரூட் பஸ்களும், நீண்ட தூர பயணத்திற்கு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பஸ்கள் இயங்கி வந்தாலும் இந்த பஸ்கள் எல்லாம் எந்த நேரத்தில் எந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்புகிறது எந்தெந்த நேரத்தில் எந்தெந்த ஊர்களுக்கு செல்கிறது கடைசியாகச் செல்லும் ஊர் என்ன என்ற தகவல்கள் எல்லாம் தெளிவாக இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டுகளில் இப்படியாக பஸ்களில் குறித்த நேரப் பலகை வைத்திருப்பார்கள்.இன்று பெரும்பாலான பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் ஸ்டாப்புகளில் நேர பலகையும் இல்லாமல் இருக்கிறது. தற்போது பஸ் ஸ்டாப்பிற்கு வரும் பயணிகள் சகப் பயணிகளிடமும் அல்லது அங்கு இருக்கும் மற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடமோ கேட்டு தான் பஸ்களின் நிலவரம் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் உட்பட தமிழகத்தில் உள்ள ஏழு போக்குவரத்து கழகங்களுக்கும் தனியாக ஒரு செயலியை உருவாக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதில் நீங்கள் குறிப்பிட்ட பஸ் ஸ்டாண்ட் அல்லது பஸ் ஸ்டாப்பை தேர்வு செய்தால் அடுத்து அந்த பஸ் ஸ்டாப்பிற்கு வரக்கூடிய பஸ் குறித்த தகவல்கள் கிடைக்கும். அந்த செயலியில் ஒரு பஸ் ஸ்டாப்பை நீங்கள் தேர்வு செய்தால் அதில் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த ரோட்டில் செல்லக்கூடிய பஸ்கள் எல்லாம் வந்து செல்கின்றன என்ற அனைத்து விதமான தகவல்களும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் நீங்கள் தேர்வு செய்த பஸ்ஸில் எந்தெந்த ஊருக்கு எவ்வளவு டிக்கெட் கட்டணம் என்ற விபரமும் அதில் இருக்கும்.

தற்போது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, சேலம், கோவை, மதுரை, ஆகிய ஏழு போக்குவரத்துக் கழகங்களில் உட்பட்ட பஸ்களுக்கு மட்டும் இந்த செயலியை அறிமுகப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் படி இந்த போக்குவரத்து கழக பஸ்களில் தகவல்கள் அந்த செயலில் பதிவேற்றப்படவுள்ளது. முதற்கட்டமாக இந்த செயலியில் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2213 புதிய டீசல் பஸ்கள் மற்றும் 500 எலெக்ட்ரிக் பஸ்கள் குறித்த தகவல் மட்டுமே இதில் பதிவேற்றப்பட உள்ளது. பின்னர் இது செய்யலில் ஒவ்வொரு பஸ்களின் தகவல்களும் மெல்ல மெல்லப் பதிவேற்றம் செய்யப்படும். ஒரு சில மாதங்களில் இந்த பதிவேற்றம் அனைத்தும் முடிந்து இந்த முழு செயலியும் பயன்பாட்டிற்கு வரும்.

Maha

Next Post

’இன்னும் ரூ.2 கோடி கொடுத்தால் காட்டக்கூடாத இடத்தையும் காட்டுவார் தமன்னா’..!! படு மோசமாக பேசிய பிரபலம்..!!

Mon Jul 10 , 2023
அருணிமா ஷர்மா இயக்கிய ஜீ கர்தா என்ற வெப் சீரிஸில் தமன்னா மேலாடையின்றி நடித்தது ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமில்லாமல் லஸ்ட் ஸ்டோரீஸிலும் படுக்கையறை, முத்தக்காட்சியில் நடித்தது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில்,சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், தமன்னா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை தமன்னா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் இருந்து கடந்த வாரம் […]

You May Like