fbpx

சூப்பர்…! இவர்கள் எல்லோருக்கும் 50% அரசு சார்பில் மானியம் வழங்கப்படும்…! எப்படி பெறுவது தெரியுமா…?

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவர், ஆவின்பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் Freezer, Cooler போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிடும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30% அல்லது அதிகப்பட்சம் ரூ.2.25 இலட்சம் மானியமும் பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50% அல்லது ரூ.3.75 இலட்சம் மானியமும் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com) மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

Vignesh

Next Post

இப்படி உங்களுக்கு நடக்கிறதா.? நீங்கள் சூனியத்தின் பிடியில் இருக்கீங்க..!

Mon Feb 5 , 2024
பொதுவாக பலருக்கும் கடவுளின் மீதும் நல்ல சக்திகள் மீதும் எந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறதோ அதே அளவிற்கு தீய சக்திகளான பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளின் மீதும் அளவுக்கதிகமாக நம்பிக்கை வளர்ந்து கொண்டே செல்கிறது. நவீன காலகட்டத்திலும் கூட மனிதனை மிஞ்சிய அபரிமிதமான சக்திகளும், அமானுஷ்யங்களும் இருந்து வருவது என்பது மறுக்க முடியாத உண்மைதான். இவ்வாறு மனிதனை மிஞ்சிய அபரிமிதமான சக்திகளில் ஒன்று தான் சூனியம். நல்ல விஷயத்திற்காகவும், கெட்ட […]
’எங்களையா பிரிக்க பாக்குற’..!! கணவருக்கு பக்கா ஸ்கெட்ச்..!! சூனியத்திற்கு ரூ.59 லட்சம்..!! Ex உடன் செம ஜாலி..!!

You May Like