fbpx

மகிழ்ச்சி…! தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாட்களுக்கு… பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!

சுபமுகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு இன்றும், நாளையும், தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். தற்போது ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான இன்றும் , நாளையும் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று, இன்றும், நாளையும் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலங்களுக்கு 100க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும். 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

All over Tamil Nadu for the next two days… Deed Registration Department action order.

Vignesh

Next Post

Holiday: தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை...!

Thu Nov 7 , 2024
A local holiday has been declared for Tuticorin district today.

You May Like