fbpx

தமிழ்நாடு முழுவதும்..!! ஜனவரி 26ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்..!! அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், ஜனவரி 26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்தவும், கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பை ரூ.5,000ஆக உயர்த்தியும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்ட நிகழ்வுகளை ‘நம்ம கிராம சபை’ செயலியில் உள்ளீடு செய்யவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: "ஜனவரி 22 2024" தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்.? வேத ஜோதிடங்களில் அந்த நாளின் சிறப்புகள்.!

Fri Jan 12 , 2024
அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நண்பகல் 12:20 மணி அளவில் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவில் சினிமா நட்சத்திரங்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் மடாதிபதிகள் சாமியார்கள் முனிவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்து மத புராணங்களின் படி அபிஜித் முகூர்த்தம், அமிர்த சித்தி யோகம் மற்றும் சர்வர்த சித்தி யோகம் ஆகியவற்றின் சங்கமத்தில் […]

You May Like