fbpx

News Alert: பொங்கல் பரிசு 1,000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்.!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகை ஜனவரி மாதம் 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்தப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு தமிழக மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக உங்கள் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துபவர்கள் சர்க்கரை குடும்ப அட்டைக்காரர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் வழங்கப்பட மாட்டாது எனவும் முந்தைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார். தற்போது இது மாற்றப்பட்டு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்த புதிய அறிவிப்பின்படி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு 1,000 ரூபாய் வழங்கப்படும் என முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் பணத்தை பெறுவதற்கான டோக்கன் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. நாளை முதல் உங்கள் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அரசு ஊழியர்களே..!! வருகை பதிவில் அதிரடி மாற்றம்..!! ஆடை அணிவதிலும் கட்டுப்பாடு..!! வெளியான அறிவிப்பு..!!

Tue Jan 9 , 2024
நாட்டில் கொரோனா காலகட்டத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு தடை செய்யப்பட்டது. நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுடைய வருகையை கையேட்டின் மூலமாக பதிவு செய்ய அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் வருகைப் பதிவு மாற்றங்களை செய்ய கோவாவின் மார்க்கோவ் கவுன்சில் முடிவு செய்திருக்கிறது. இதன் மூலமாக ஊழியர்களின் செயல் திறன் மேம்படுத்தப்படும் என்றும் வருகை விதிகள் அமல்படுத்தவும் ஒழுக்கத்தை பராமரிக்க முடியும் என அரசு தெரிவித்திருக்கிறது. அதேசமயம் வருகை பதிவுக்கான முக […]

You May Like