ஆந்திரா மற்றும் தெலுங்கனாவில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே சங்கராந்தி(பொங்கல்) ரிலீஸில் முன்னுரிமையில் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும், டப்பிங் படங்களுக்கு மீதம் இருக்கும் தியேட்டர்கள் தான் தரப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து, தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி, விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது.
வாரிசு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது ஆனால், பொங்கலுக்கு சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாக இருப்பதால் விஜய் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு சீமான் தொடங்கி லிங்குசாமி வரை சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் “என் பதில் வித்தியாசம இருக்கும்” என்று கூறினார், அதற்கு பத்திரிகையாளர் ஒருவர் “அதற்கு தானே வந்தோம்” என்று கூற அவரும் “தெரியுமே” என்று பதில் கூற, சிரிப்பலை ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய கே.ராஜன் அவர்கள் “விஜய் அஜித் இருவருமே பெரிய ஹீரோ, இவர்கள் படத்துக்கு சமமாக தான் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் இது தமிழ்நாடு நிலவரம், ஆனால் ஆந்திரா, தெலுங்கு திரைப்படத்தொழிலை காக்கும் ஊர் என்றும், அங்கு சிரஞ்ஜீவி பாலகிருஷ்ணா இருவருமே பெரிய ஹீரோ இவர்கள் படத்துக்கு தான் முன்னுரிமை. விஜய் படம் தமிழகத்திலும் ரிலீஸ் ஆந்திராவிலும் ரிலீஸ், ஆனால் பாலகிருஷ்ணா படம் ஆந்திராவில் மட்டும் தான் ரிலீஸ், அந்த படத்திற்காக அவர்கள் போட்ட முதலீட்டை காப்பாற்ற அவர்கள் நினைப்பது தவறில்லை. வாரிசு படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளர் இயக்குனர் என இருவருமே தெலுங்கு துறையை சார்ந்தவர்கள் இவர்கள் தெலுங்கு ஹீரோவை வைத்து படம் பண்ணாமல் தமிழ் ஹீரோவை கூப்பிட்டு சம்பளத்தில் 25 கோடி கொடுத்து உயர்த்தினால், அந்த ஹீரோ அடுத்த படத்துக்கும் அதே சம்பளம் தான் கேட்ப்பார், இதனால் தமிழ் சினிமா அழியும் என்று பேசிய கே.ராஜன் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூவை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் பேசிய கே.ராஜன் அவர்கள் விஜய் படமான வாரிசு நன்றாக ஓடக்கூடிய படம் தான், அனால் ஆந்திராவை பொறுத்தவரை வாரிசு அங்கு டப்பிங் படம் தான். நீங்க இங்க தமிழ் திரையுலகை காப்பற்றவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் KGF படம் வரும்போது நம்மா ஹீரோ படத்தை போட்டிக்கு கொடுப்பீங்க, உங்களை போல் அவர்களும் இருப்பார்களா, ஏன் அங்கு சண்டை போடுறீங்க. வாரிசு ஆந்திராவில் 35% தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும், விஜய்க்கு மரியாதை அங்கு அவ்வளவு தான் என்று கூறினார்.
தமிழ் ஹீரோக்கள் ஆந்திரா போனதே தப்பு, முதலில் தமிழ் தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள், தெலுங்கு ஹீரோக்கள் அவர்களுடைய தயாரிப்பாளர்களுக்கு நல்ல ஒத்துழைப்பை தருகிறார்கள், தமிழ் ஹீரோக்கள் அவர்களை பார்த்து கதுக்கவேண்டும் என்று தமிழ் ஹீரோக்களை வறுத்தெடுத்துவிட்டார் கே.ராஜன்.