fbpx

”அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்”..!! தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு..!!

இனி வரும் நாட்களில் அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டிலும் அனைத்து வகையான கார்களையும் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனிப்பட்ட மற்றும் டிராவல்ஸ் முறையிலும் அல்லது ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களை மையப்படுத்தியும் ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ போன்ற கார்கள் மஞ்சள் போர்டுடன் வாடகைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Chella

Next Post

உலகக்கோப்பை பைனல் ஒருதலைப்பட்சமாக தான் இருக்கும்!… ஆஸி. கேப்டன் ஓபன் டாக்!

Fri Nov 17 , 2023
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மைதானம் ரசிகர்களால் நிரம்பி இருக்கும். ஆனால் ஆதரவு ஒருதலைப்பட்சமாக தான் இருக்கும் என்று ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது […]

You May Like