fbpx

“ மக்களுக்கு சரியான பாதையை காட்டவே, ராமரை அல்லா அனுப்பினார்..” ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை..

மக்களுக்கு சரியான பாதையை காட்டவே ராமரை அல்லா அனுப்பினார் என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்..

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி (ஜேகேஎன்என்பி) நிறுவன தினத்தையொட்டி, உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கர்னாயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர், வாக்கு சேகரிப்பதற்காகவே பாஜக ராமரின் பெயரைப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.. 2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு வாக்காளர்களைக் கவர ராமர் கோயில் பற்றி பாஜக விரைவில் பேசத் தொடங்கும் என்றும் அப்துல்லா கூறினார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ தேர்தல் வரப்போகிறது, இங்கு பெரும் பணம் பறக்கும். நம் தாய்மார்களுக்கும், மகளுக்கும் கோயிலைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லப்படும். அன்றைய தினம்தான் பாஜகவினர் ராமர் கோயில் திறப்பு விழா நடத்துவார்கள். அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை மக்கள் மறந்துவிட்டு, தாங்கள் மட்டுமே (பாஜக) ராமரின் பக்தர்கள் என்று நினைக்கும் வகையில் அந்த விழாவை செய்வார்கள். கடவுள் ராமர் அனைவரின் கடவுள், மக்களுக்கு போதிக்க அல்லா அவரை அனுப்பியுள்ளார்..

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், ராமர் என்பவர் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லது பிறர் அனைவரின் கடவுள். அதேபோல், அல்லாவும் முஸ்லிம்களுக்கு மட்டுமானவர் அல்ல, அனைவருக்கும் கடவுள். சமீபத்தில் காலமான பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மிக முக்கியமான எழுத்தாளர், ராமரும் மக்களுக்கு சரியான பாதையைக் காட்ட அல்லாவால் அனுப்பப்பட்டவர் என்று எழுதினார். எனவே, நாங்கள் மட்டுமே ராமரின் பக்தர்கள் என்று கூறுபவர்கள் முட்டாள்கள், அவர்கள் ராமரை விற்க மட்டுமே விரும்புகிறார்கள், அவர்களுக்கு ராமர் மீது எந்த பாசமும் இல்லை, அவர்களுக்கு அதிகார பாசம் மட்டுமே உள்ளது” என்று தெரிவித்தார்.. அவரின் இந்த கருத்து தேசிய அரசியலில் சர்ச்சையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது..

Maha

Next Post

இந்த 10 மாவட்டங்களில்.. இன்று கனமழை கொட்டி தீர்க்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

Fri Mar 24 , 2023
கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான முதல் கனமழை பெய்தது.. இதே போல், கிருஷ்ணகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.. இந்த மழை காரணமாக, வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் […]

You May Like