fbpx

அசத்தல் அறிவிப்பு… அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு திருக்குறள் போட்டி…! ரூ.2 லட்சம் பரிசுத்தொகை…

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி – வினா போட்டி நடைபெற உள்ளது.

திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா ஆண்டினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறையின் சார்பாக, பார்வையில் கண்டுள்ள அரசு கடிதத்தில் கூறப்பட்டுள்ளவாறு விருதுநகர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 28 ஆம் தேதி அன்று மாநில அளவில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வினாடி வினா நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு தங்கள் மாவட்டத்தில் இருந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

முதல்நிலை போட்டிகளில், 38 மாவட்டங்களில் எழுத்து தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று குழுக்களாக (ஒன்பது பேர்) தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் காலிறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில், சிறந்த 40 குழுக்கள் காலிறுதிக்கு தேர்வு செய்யப்படுகின்றன. காலிறுதியில் நான்கு சுற்றுகள் நடத்தப்பட்டு, 12 குழுக்கள் இறுதிக்கு தேர்வு செய்யப்படுகின்றன. இந்த 12 குழுக்களில் முதல் 6 இடம் பெற்ற 6 குழுக்கள் இறுதியில் கலந்து கொள்ளும்.

இறுதிப் போட்டியில் வெல்லும் முதல் குழுவிற்கு ரூபாய் 2 லட்சமும், இரண்டாம் குழுவிற்கு ரூபாய் 1.5 லட்சம் மூன்றாம் குழுவிற்கு ரூபாய் ஒரு லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும். மேலும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இதர மூன்று குழுக்களுக்கும் ஊக்கப் பரிசாக ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவில் எழுத்துத் தேர்வு (கொள்குறி வகை) நடத்தி அதில் சிறந்த மதிப்பெண் பெறும் ஒன்பது நபர்களை மூன்று குழுக்களாக இணைத்து அனுப்பலாம்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுறியும் அனைத்துத்துறை அனைத்து நிலை அலுவலர்களும், அரசு/ அரசு உதவி பெறும் / அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Amazing announcement… Thirukkural competition for government employees & teachers…! Rs. 2 lakh prize money

Vignesh

Next Post

மீண்டும் ஆவின் பால் விலை உயர்வு... யாரை ஏமாற்ற முயல்கிறது திராவிட மாடல் அரசு..? அன்புமணி காட்டம்...

Mon Dec 16 , 2024
Aavin milk prices hiked again... Who is the Dravidian model government trying to deceive?

You May Like