fbpx

வெறும் 3 வருடத்தில் புதிய இந்தியாவை உருவாக்கிய அமெரிக்கா, சீனா..!

சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் வெளியிட்டுள்ள GDP தரவுகள் படி 2022 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 100 டிரில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது 100 டிரில்லியன் டாலர் அளவீட்டை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.   இந்த 100 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் யார் அதிக பங்கீட்டை கொண்டு உள்ளனர், யார் யாரை முந்துகிறார்கள் என்பது தான் முக்கிய போட்டியாகவே உள்ளது. ஒருபக்கம் இந்தியா பல நாடுகளை ஓரம் கட்டி டாப் 5 இடத்திற்குள் நுழைந்து வரும் வேளையில், சீனா அதிரடியாக வளர்ச்சி அடைந்து அமெரிக்காவுக்கு டஃப் பைட் கொடுக்கிறது.

உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெறும் 34 டிரில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இந்த நிலையில் கடந்த 20 வருடத்தின் உலக நாடுகளின் மொத்த ஜிடிபி 3 மடங்கு என்ற அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது வர்த்தக சந்தையில் மிகவும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பதற்றத்தில் Taiwan 2019 ஆம் ஆண்டு அதாவது கொரோனா தொற்றுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு, உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 87 டிரில்லியன் டாலராக இருந்தது. கடந்த 2 வருடம் கொரோனா பாதிப்பில் ஏற்பட்ட சரிவை சமாளித்து மீண்டு வருவதே பெரும் சுமையாக மாறியிருந்தது என்றால் மிகையில்லை. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் 87 டிரில்லியன் டாலர் சர்வதேச ஜிடிபி-யில் அமெரிக்கா 21.38 டிரில்லியன் டாலர், சீனா 14.34 டிரில்லியன் டாலர், இந்தியா 2.84 டிரில்லியன் டாலர் பங்கீட்டை கொண்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று உடன் சேர்த்து 3 வருடங்களுக்கு பின்பு 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி 25.46 டிரில்லியன் டாலராகவும், சீனாவின் ஜிடிபி 18.1 டிரில்லியன் டாலராகவும், இந்தியாவின் ஜிடிபி 3.39 டிரில்லியன் டாலராகவும் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜிடிபி 4.08 டிரில்லியன் டாலரும், சீனா 3.76 டிரில்லியன் டாலர் அளவிலான ஜிடிபி வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா வெறும் 0.55 டிரில்லியன் டாலர் ஜிடிபி மட்டுமே சேர்ந்துள்ளது. சொல்லப்போனால் 3 வருடத்தில் சீனாவும், அமெரிக்காவும் தனது பொருளாதார அளவீட்டில் புதிய இந்தியாவை சேர்த்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜடிபி 3.39 டிரில்லியன் டாலர். 3 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஜிடிபி 4.08 டிரில்லியன் டாலரும், சீனா 3.76 டிரில்லியன் டாலர் அளவிலான ஜிடிபி கூடுதலாக சேர்த்துள்ளது.

Maha

Next Post

பாசுபத அஸ்திரத்தை அர்ஜூனன் பெற்ற கேதாரீஸ்வரர் கோயில்..!

Tue Jul 4 , 2023
கேதார்நாத். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற கேதாரீஸ்வரர் கோயில் உள்ளது. 12 ஜோதிர் லிங்கத்தில் இதுவும் ஒன்று. பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு, கேதாரீஸ்வரர் திருக்கோயிலானது வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அதன்படி ஏப்ரல் மாதத்தில் பக்தர்களுக்காக திறக்கப்படும் இக்கோயில், அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது தீபாவளி கழித்து மூடப்பட்டு விடும். இத்திருக்கோயில் மூடப்படும் நாளில் தேவர்கள் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே […]

You May Like