ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரஸில் அடுத்த மாதம் முதல் அணு ஆயுதங்கள் குவிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டரை சந்தித்துள்ளார். அப்போது ஜூலை 7 அல்லது 8 உள்ளிட்ட தேதிகளில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டிட வேலைகள் முடிவடைந்து விடும் எனவும் அதன் பின்னர் உடனடியாக ஆணு ஆயுதங்கள் கொண்டு வந்து குவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இத்தகைய நிலையில் மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்துவதற்காக தான் ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு பெலாராஸ் அதிபரும் உடந்தையாக இருக்கிறார் என்று அந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.