அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோனல்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தது.
அவ்விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய டெக்சஸ் செனட்டர் டெட் குரூஸ், ஆனால் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கவில்லை. இதனிடையே, தங்களது ஹெலிகாப்டர்களில் ஒன்று அவ்விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். அந்தப் பயணிகள் விமானம் பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 5342 DC என்ற அவ்விமானம் கேன்சஸ் மாநிலத்தின் விச்சிட்டா நகரிலிருந்து புறப்பட்டது.
அவ்விமானத்தில் 60 பயணிகளும் நான்கு ஊழியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய விமானம் போடோமாக் நதி பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. விமான நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள பொட்டோமக் ஆற்றில் தேடல், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் பல்வேறு அமைப்புகள் கைகோத்துள்ளதாகவும் காவல்துறை கூறியது.
விபத்தின் வீடியோவில் இரண்டு விமானங்களும் தீப்பற்றி எரியும் நிலையில் காட்சியளிக்கின்றன. புதன்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வாஷிங்டன் DC தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. மீட்புப் படகுகள் பொடோமாக் ஆற்றில் ஆய்வு செய்து வருகின்றன. விபத்தின் விளைவாக, ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
Read more : Gold Rate : தாறுமாறாக எகிறிய தங்கம் விலை.. 61,000ஐ நெருங்கும் ஒரு சவரன் தங்கம்..!! நகைப்பிரியர்கள் ஷாக்..