தமிழகத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரை மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற்ற என் மண் என் மக்கள் பாதையாத்திரை தொடக்க விழாவில்; பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் திமுக காப்பாற்றி வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தேர்தல் சமயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அவர் அளித்த வாக்குறுதிகள்.. என்ன ஆனது?, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மது, போதை, கஞ்சா என தமிழகத்தை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதாக கூறினார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆகும் கனவில் ஸ்டாலின் இருப்பதாகவும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் குடும்ப அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள். தமிழகத்தில் அண்ணாமலையின் இந்த பாதயாத்திரை மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என தெரிவித்தார்.