குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தனது தயாரிப்புகளை அமுல் பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துகிறது, இந்த நிலையில் மாநிலத்தில் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி அறிவித்துள்ளது. 2022 டிசம்பரில் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பால் விலையில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா, அகமதாபாத் மற்றும் காந்திநகர் சந்தைகளில் அமுல் பாலின் விலைகள் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன, என்று கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அமுல் கோல்டு இப்போது 500 மில்லி ரூ.32க்கும், அமுல் ஸ்டாண்டர்டு 500 மில்லி ரூ.29க்கும், அமுல் தாசா 500 மிலி ரூ.26க்கும், அமுல் டி-ஸ்பெஷல் 500 மில்லி ரூ.30க்கும் கிடைக்கும்.