fbpx

11 நிமிட நடைப்பயிற்சி, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.. புதிய ஆய்வில் தகவல்..

மாறி வரும் வேகமான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் பலரும் வேலை வேலை என்று ஓடி வருகின்றனர்.. உடற்பயிற்சி என்பது ஒவ்வொருவரின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டாலே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் இறப்பு அதிகரித்து வருவதால், சில நிமிட நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது யோகா அல்லது உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிக முக்கியமானது. அந்த வகையில், மிக எளிய பயிற்சிகளில் ஒன்றான நடைபயிற்சியை மேற்கொள்வதால் இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம் புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன..

நீங்கள் "வாக்கிங்" செல்பவர்களாக இருந்தால் இந்த 8 விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது..!

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் (The British Journal of Sports Medicine), என்ற இதழில் அந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.. அதில் இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க ஒரு நாளைக்கு 11 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி செய்தால் போதுமானது.. அல்லது அதற்கு சமமான மிதமான உடற் பயிற்சி செய்வது போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது… 30 மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 196 சக மதிப்பாய்வு செய்யப்பட்ட கட்டுரைகளை ஆராய்ச்சியாளர்கள் பார்த்தனர். உடல் செயல்பாடுகளின் அளவுகள் மற்றும் இதய நோய், புற்றுநோய் மற்றும் ஆரம்பகால மரணத்தின் ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்தனர்.

ஒரு வாரத்திற்கு 75 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட செயல்பாட்டின் மூலம் இளமைகால மரணத்தின் அபாயத்தை 23% குறைக்கிறது என்று அவர்கள் கண்டறிந்தனர். இருதய நோய் அபாயத்தை 17% மற்றும் புற்றுநோயை 7% குறைக்க இது போதுமானதாக இருந்தது.

11 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்வதால் என்னென்ன நன்மைகள்..? தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது, இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும்.. ஆய்வின்படி, இது இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. நடைபயிற்சி மூட்டுகளை வலுப்படுத்த உதவுவதுடன், மூட்டு வலியைக் குறைக்கிறது.. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.. நோயெதிர்ப்பு அமைப்பு, தசைகள், எலும்புகள் போன்றவற்றை வலுப்படுத்த உதவுகிறது. தினமும் சுமார் 15 நிமிட நடைப்பயிற்சி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.

Maha

Next Post

அசத்தல் அறிவிப்பு...! மாதம் தோறும் இவர்களுக்கு ரூ.3,500 உதவித்தொகை...! எப்படி விண்ணப்பிப்பது...?

Sun Mar 12 , 2023
வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-23 ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 01.01.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் […]

You May Like