இன்று சணல் பொருட்கள் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
சணல், சுற்றுச்சூழலுக்கேற்ற இயற்கை பொருள் மேம்பாட்டிற்கு பொறுப்பு வகிக்கும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சணல் கழகம், பல்வேறு செயல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள தேசிய சணல் கழகம் சார்பில் இன்று 12 மணி அளவில் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சணல் சின்னம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சுமார் 1000 சணல் சின்னம் பொறிக்கப்பட்ட பைகள் கல்லூரி மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உள்ளது.