பள்ளிகளில் ஜூன் 26-ம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடத்த வேண்டும்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின் உடல், மன நலனை காக்க மருத்துவ குழுக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உரிய பரிசோதனைகளை செய்யவும் இளைஞர் நீதி சட்டம், போக்சோ சட்டம்,சாலை பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான போதை பொருள்கள் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தவும் உயர்கல்வி உதவி திட்டம் உள்ளிட்ட பல அரசுத்திட்டங்கள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து அரசு உதவி பெறும்உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஜூன் 26-ம் தேதி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு 27-ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூகநலத்துறை, காவல் துறையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும், மாணவர்களுக்கான அவசர உதவி எண் சைல்ட் ஹெல்ப்லைன்1098 பள்ளிக்கல்வித்துறையின் மாணவர்உதவியின் 14417 குறித்தும் விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும். மேலும், காவல் துறை மூலம் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் போதைபொருளுக்கு அடிமையாவதை தடுத்தல்,பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துதல், இணைய வழி விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.