fbpx

நாளை நடைபெறும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…! யார் எல்லாம் இதில் பங்கு பெறலாம்…? முழு விவரம் இதோ…

தருமபுரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்துகொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌.

இதன்‌ மூலம்‌ தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்தேர்வு அனுப்பப்படும்‌. இம்முகாமில்‌, பல்வேறு தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்துகொண்டு, விற்பனையாளர்‌, மார்க்கெட்டிங்‌ எக்ஸிக்யூட்டிவ்‌, சூப்பர்வைசர்‌, மேலாளர்‌, கம்ப்யூட்டர்‌ ஆப்ரேட்டர்‌, தட்டச்சர்‌, அக்கவுண்டன்ட்‌, கேசியர்‌, மெக்கானிக்‌ போன்ற பணிகளுக்கு,தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்‌.

பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்துவித கல்வித்தகுதிக்கும்‌ ஆட்கள்‌ தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள்‌ தெரிவித்துள்ளன. ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ள அனைவரும்‌, வருகின்ற 21.04.2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌ என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ஓரின சேர்க்கை திருமணம் அங்கிகாரம் வழங்கும் சட்டம்...! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம்...!

Thu Apr 20 , 2023
ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கிகாரம் குறித்து கருத்துக்களை கேட்டு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ஒரே பாலின திருமணத்தை நாட்டின் நெறிமுறை மற்றும் சமூக ஒழுக்கமாக […]

You May Like