ரஷ்யாவால் கைது செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாதி, ‘நபியை அவமதித்ததற்காக’ பழிவாங்கும் வகையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு சந்தேகத்திற்கிடமான ஐஎஸ் தீவிரவாதியை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது நபிகள் நாயகத்தை அவமதித்ததற்காக இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.. இதுதொடர்பான வீடியோவையும் ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது..
அந்த வீடியோவில் பேசிய அந்த நபர் “2022ல், நான் ரஷ்யாவுக்கு வந்தேன்.. இங்கிருந்து தான் நான் இந்தியாவுக்கு செல்ல வேண்டும்.. நபிகள் நாயகத்தை அவமதித்ததற்காக ஐ.எஸ். அமைப்பின் உத்தரவின் பேரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த எனக்கு இங்கு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்” என்று பேசி உள்ளார்..
அந்த தீவிரவாதி மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்தவர் என்பது, அவர் இந்தியாவின் ஆளும் அரசின் பிரதிநிதிகளில் ஒருவருக்கு” எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரை, அந்த நபர் துருக்கியில் இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.. அங்கு அவர் ஐஎஸ் தலைவர்களில் ஒருவரால் தற்கொலை படை வீரராக சேர்க்கப்பட்டார் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது..
தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, ரஷ்யாவை விட்டு புறப்பட்ட பிறகு, இந்தியாவில் பயங்கரவாத செயலைச் செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது..