மும்பையில் 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த சமூக சேவகியின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.
மும்பை கல்பாதேவி பனஸ்வாடியை சார்ந்தவர் கீதா விர்க்கர். இவர் மகேஷ் விஸ்வநாத்(62) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மகேஷ் சூதாட்டம் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அடிக்கடி கீதாவிடம் மது மற்றும் சூதாட்டத்திற்காக காசு கேட்டு தொந்தரவு செய்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கீதா, மகேஷ் விஸ்வநாத்தை வீட்டை காலி செய்யும்படி கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் 25 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் 25 வருடம் ஒன்றாக இருந்தவர் தற்போது வீட்டை விட்டு வெளியேற்றியதால் கோபமடைந்த மகேஷ் விஸ்வநாத், கீதாவை பழிவாங்க முடிவு செய்தார். இதற்காக ஜனவரி 13ஆம் தேதி அன்று ஆசிட் வாங்கிக்கொண்டு அவரது வீட்டருகில் அதிகாலையிலேயே மறைந்து காத்திருக்கிறார். கீதா வெளியில் வந்ததும் அவரது முகத்தில் மறைத்து வைத்திருந்த ஆசீட்டை வீசிருக்கிறார் மகேஷ். கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரைக் காப்பாற்ற வந்த அவரது மகன் ஆதித்யா மீதும் ஆசிட் வீச போவதாக மிரட்டி இருக்கிறார்.
இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் ஓடி வரவே அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார் மகேஷ் விஸ்வநாத். ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட கீதா பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் 50 சதவீதத்த தீக்காயங்களால் முகம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இதனை அடுத்து காவல்துறை இதனை கொலை வழக்காக மாற்றி மகேஸ் விஸ்வநாத்தை தேடி வருகிறது.