கர்நாடகா நாட்டு பகுதியில் பாகல்கோட் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கக்கூரில் தியாமப்பா ஹரிஜன் (58) வயதானவர் ஒருவர் வசித்து வருகிறார்.இவர் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சில நாணயங்களை விழுங்கி வந்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் காண்பித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் வழங்கிய மாத்திரைகளை உண்டு வந்துள்ளார் இருப்பினும் வயிற்று வலி சரியாகவில்லை. மேலும் எக்ஸ்ரே, என்டோஸ்கோபி செய்து பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் வயிற்றில் நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்து இருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையில் பல நாணயங்கள் சேர்ந்து மொத்தம் 187 நாணயங்கள் எடுக்கப்பட்டது.
5 ரூபாயில் மதிப்புள்ள 56 நாணயங்கள், 2 ரூபாயிலுள்ள 51 நாணயங்கள், 1 ரூபாயிலுள்ள 80 நாணயங்கள் ஆகியன சேர்த்து மொத்தமாக நாணயங்கள் 1.50 கிலோ இருந்துள்ளது.