fbpx

பணத்தோடு சேர்ந்து கண் பார்வையையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த கோயம்புத்தூர் இளைஞர் தற்கொலை!

கோயமுத்தூர் மாவட்டத்தின் வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு 25 வயதில் மதன்குமார் என்ற மகன் இருந்திருக்கிறார். ரம்மி விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் ஆன்லைன் மூலமாக அடிக்கடி தம்பி விளையாட்டில் மும்முறமாக ஈடுபட்டிருக்கிறார். இதன் காரணமாக இவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு கண்பார்வையும் அங்க ஆரம்பித்திருக்கிறது. மேலும் இந்த விளையாட்டின் காரணமாக இவருக்கு பெரும்பளவில் பொருளாதாரம் நஷ்டமும் ஏற்பட்டதாக தெரிகிறது. உடல் நலமும் பாதிக்கப்பட்டு பொருளாதார நஷ்டமும் அடைந்ததால் பெரும் மன உளைச்சலில் இருந்த மதன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்த சம்பவம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் ஆளும் அரசு இது நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானங்களை நிறைவேற்றினாலும் அவை ஆளுணரின் ஒப்புதலுக்காக காத்திருப்பதால் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

Baskar

Next Post

பிரேசிலில் 6 சென்டிமீட்டர் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை! அமெரிக்க மருத்துவ நிறுவனம் ஆய்வு!

Mon Feb 20 , 2023
பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாலோ நகரில் அண்மையில் ஒரு பெண் குழந்தை ஒன்று ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் பிறந்ததால் மக்களிடம் ஆச்சரியமும் பரபரப்பு ஏற்பட்டது. பிரேசில் நாட்டைச் சார்ந்த தம்பதி ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது அந்தக் குழந்தை முதுகில் ஆறு சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் பிறந்ததால் மக்கள் அதிர்ச்சியும் பரபரப்பும் அடைந்தனர். இதன் காரணமாக அந்த குழந்தை அதிசய […]

You May Like