fbpx

‘அன்பில் மகேஷுக்கு ’ பன்றிக்காய்ச்சல் .. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

அமைச்சர் அன்பில் மேகேஷுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் , பன்றிக் காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. குழந்தைகளை ப்ளூ காய்ச்சல் தாக்கி வருகின்றது. தலைமைச் செயலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம்நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துசை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஒவ்வொரு சோதனையாக செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு கிடைத்தது. டெங்கு காய்ச்சலுக்கான சோதனைகள் மேற்கொண்டபோது டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனால் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் கல்வித்துறையில் பல நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது எனவும் டெங்கு காய்ச்சல் உறுதி எனவும் தகவல்கள் வந்தன.

இந்நிலையில் அன்பில் மகேஷ் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அவரது உடல் சீராக இருப்பதாகவும் ஆலோசனைக்குப் பின்னர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தார்.

Next Post

அசத்தும் குழந்தை; கோல்கம்பத்துக்குள் கால்பந்தை சரியாக உதைக்கும் குழந்தை.. வைரல் வீடியோ..!!

Wed Sep 28 , 2022
ஒரு தீவிர கால்பந்து ரசிகர் தனது குழந்தைக்கு ஒரு பந்து மற்றும் ஒரு கோல்கம்பத்தை வாங்கி விளையாட கொடுத்துள்ளார். அவருடைய குழந்தை பிறந்ததிலிருந்து அந்த குழந்தைக்கு, கால்பந்து பயிற்சி அளித்து வந்துள்ளார். இதனால் குழந்தை தவழ ஆரம்பிப்பதற்கு முன்பே தரையில் படுத்துக்கொண்டே கோல் கம்பத்தில் சரியாக பந்தை உதைக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த குழந்தையின் தந்தை, “மான்செஸ்டர் யுனைடெட்” ஃபுட்பால் கிளப் அணியின் தீவிர கால்பந்து […]

You May Like