பொதுமக்களின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதித்து ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 28 அன்று கந்துகுருவில் சந்திரபாபு நாயுடு நடத்திய பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, அமராவதி அருகே சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சி பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாலை பேரணிகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில் “பொதுச் சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுக் கூட்டத்தை நடத்துவதற்கான உரிமை, 1861ஆம் ஆண்டு காவல்துறைச் சட்டத்தின் 30வது பிரிவின்படி, ஒழுங்குபடுத்தப்பட்ட விஷயமாகும்” என்று அரசாங்கம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.