fbpx

மீண்டும் ஓர் வாய்ப்பு…! Tancet 2023 நுழைவு தேர்வுவிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…! முழு விவரம் உள்ளே…

முதுகலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ளது செய்தி குறிப்பில், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவு தேர்வுவிற்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கு கட்டணமாக MCA, MBA படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 500 ரூபாயும், பிற வகுப்பினருக்கு 1,000 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

இவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெறும். CEETA, எம்.இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாயும், இதரபிரிவினருக்கு 1,500 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இவர்களுக்கு கலந்தாய்வு கட்டணமும் இதில் அடங்கும். இவர்களுக்கான நுழைவுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி நடைபெறும். https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, மாணவர்கள் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

Vignesh

Next Post

கர்ப்பிணிகள் Paracetamol மாத்திரையை எடுக்கக்கூடாது.. இந்த ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படும்..

Thu Feb 23 , 2023
நாம் எப்போதெல்லம் உடல்நலக்குறைவு அல்லது நோயால் அவதிப்படுகிறோமோ, அப்போதெல்லாம் மருந்துகளை எடுத்துக்கொள்ள நினைப்போம். ஆனால் தேவையில்லாமல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்கிறது மருத்துவ அறிவியல். பெரும்பாலான மருந்துகளை மருத்துவரின் அனுமதியின்றி எடுத்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் நம்மில் பெரும்பாலோர் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக்கொள்கிறோம். இந்த மருந்துகளில், பாராசிட்டமால் (Paracetamol) என்பது முதன்மையான மருந்தாக உள்ளது.. பாராசிட்டமால் ஒரு ஆண்டிபிரைடிக் (antipyretic) மருந்தாகும், இது பொதுவாக ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் […]

You May Like